தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். புதிது, புதிதாக எத்தனை நடிகைகள் வந்தாலும், தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நயன்தாரா.தங்களது உள்ளம் கவர்ந்த நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 

சினிமா நிகழ்ச்சிகள், கோவில், பார்ட்டி என எங்கு சென்றாலுக் விக்கியுடன் சுற்றி வரும் நயன், தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பிற்கு கூட காதலருடன் சென்றது பரபரப்பை கிளப்பியது. அடிக்கடி வெளிநாடுகளில் ஊர் சுற்றிய இருவரும் தங்களது ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிட்டு முரட்டு சிங்கிள்ஸை காண்டாக்கி வந்தனர். 

நயன் - விக்கி காதல் ஓவர் டீப்பாகிவிட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவரும் தனித் தனியே போட்டோ போட்டது ரசிகர்களுக்கிடையே சந்தேகத்தை கிளப்பியது. அதே போல நியூர் பார்ட்டியில் விக்கி குடித்துவிட்டு வந்ததாகவும், அதனால் நயன் அவர் மீது செம்ம கடுப்பில் இருப்பதாகவும் வதந்தி பரவியது. 

இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் முடிந்துவிட்டது. இருவரும் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு ஏற்ற மாதிரி பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கும் நயன் தனியாகவே வந்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே பிரேக்கப் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கன்பார்மே செய்துவிட்டனர். 

View this post on Instagram

This senorita needs a margarita ✨

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on Jan 7, 2020 at 3:56am PST

இந்நிலையில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒரே மாதிரியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். விருது விழாவின் போது அணிந்திருந்த அதே உடையில் நயன்தாரா, விக்னேஷ்சிவனை அணைத்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மற்றொரு புகைப்படத்தில் மிஸ் வீக்கீஸ் என்ற சிப்ஸை பாக்கெட்டை நயன்தாரா வைத்துள்ளது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.  மீண்டும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, பிரேக்கப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.