nayanthara and trisha acting mother character

தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கதாநாயகிகளாக மட்டுமே நடித்து வருகின்றனர் 'நயன்தாரா' மற்றும் 'திரிஷா'.

தற்போது இருவருமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தது சலித்து விட்டதால், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் காமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்விக்கு அம்மாவாக நடிக்கிறார்.

அதே போல நடிகை திரிஷாவும், சதுரங்க வேட்டை படத்தில் இதே குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இதன்மூலம் ஒரே குழந்தைக்கு இந்த இரு நாயககிகளும் தாயாகியுள்ளனர்.

சினிமா துறையில் நடிகர் கொட்டாங்குச்சி காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வரும் நிலையில், அவருடைய குழந்தை முன்னணி நடிகைகளுடன் நடித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.