நடிகை நயன்தாரா மற்றும் தமன்னா இருவரும் ஒரே கதையில் தற்போது நடித்துள்ளனர். தமிழிலில் 'கொலையுதிர் காலம்' என்கிற பெயரிலும், அதே படம் இந்தியில்  'காமோஷி'  என்று தமன்னா மற்றும் பிரபுதேவா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த இரண்டு படங்களுமே... மே 31 ஆம் தேதி  ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களையும் இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக  இருக்கும், இவ்விரு நடிகைகளும், ஒரே கதையில் உருவான படங்களில் நடித்துள்ளதால், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழி படங்களுக்குமே  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும்இவர்கள் இருவரில் யாருடைய நடிப்பு பெஸ்ட், மற்றும் அதிக வசூல் செய்யப்போது யார் படம் என பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.