நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஹிட் கொடுக்கும் விக்கி :
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவனின் முதல் படமே வெற்றி பெற்றது. நயன்தார, விஜய் சேதுபதி என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு இவர் இயக்கிய இந்த படம் நல்ல பெயரை விக்கிக்கு பெற்று கொடுத்தது.. நானும் ரவுடிதான் படத்தில் ராதிகாவை போலவே விக்கியின் தாயாரும் காவல் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்து வாக்குல ரெண்டு காதல் :
சிம்புவின் போட போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி, நயன்தார, சமந்தா நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்தது பாடல்கள் வெளியாகி ஹிட் கொடுத்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த வடிவேலு - பிரபுதேவா..மீண்டும் 'சிங் இன் தி ரெயின்'..

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.
நயன்தாரா - சமந்தா க்யூட் வீடியோ :
சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பின் போதும் நயன்தாராவின் பிறந்தநாளின் போதும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
