Annapoorani Review: செஃபாக நயன்தாரா சோபித்தாரா? சோதித்தாரா.. 'அன்னபூரணி' படத்தின் விமர்சனம் இதோ.!

நடிகை நயன்தாரா நடிப்பில், அவரது 75 வது படமாக உருவாகியுள்ள 'அன்னபூரணி' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு எப்படிப்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Nayanthara And Jai Acting Annapoorani Movie Review mma

நடிகை நயன்தாரா நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகில் அறிமுகமான நடிகை நயன்தாரா... முதல் படத்திலேயே பாலிவுட் கிங் காங் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இப்படம் சுமார் 1160 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இதை தொடர்ந்து தமிழில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து வெளியான 'இறைவன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து நடிகை நயன்தாரா தன்னுடைய 75 ஆவது திரைப்படமாக 'அன்னபூரணி' படத்தை தேர்வு செய்து நடித்தார். ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறக்கும் பெண் ஒருவர், தனக்கான தடைகளைத் தாண்டி ஒரு செஃபாக எப்படி ஜெயிக்கிறார் என்பதை, காதல், செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் உருவாகி இருந்தது.

Nayanthara And Jai Acting Annapoorani Movie Review mma

இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் நடிகர் ஜெய், 'ராஜா ராணி' படத்திற்கு பின்னர் மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். அன்னபூரணி படத்தில் சத்யராஜ், ரெடின்  கிங்ஸ்லி, கே எஸ் ரவிக்குமார், சச்சு, ரேணுகா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Tamilselvan Marriage: காதலியை கரம் பிடித்த சன் டிவி சீரியல் நடிகர் தமிழ் செல்வன்! குவியும் வாழ்த்து!

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்  வெளியாகி உள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்கள் ட்விட்டரில் கொடுத்துள்ள விமர்சனம் பற்றி பார்க்கலாம்...

Nayanthara And Jai Acting Annapoorani Movie Review mma

ரசிகர் ஒருவர் இப்படம் பற்றி கூறியுள்ளதாவது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, மிகவும் நேர்த்தியான திரைப்படம் 'அன்னபூரணி'. அவரது நடிப்பு ஆச்சரியப்படுத்தியது. பெண்களுக்கு வலு சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று என குறிப்பிட்டு இப்படத்திற்கு, 5 திற்கு 3 மதிப்பீடு கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

மற்றொரு ரசிகர்... நிலேஷ் கிருஷ்ணாவின் அன்னபூரணி, என்பதற்கு தகுதியானவர் நீங்கள். அருமையான கதை, மத உணர்வுகள் பற்றி விரிவாக இந்த ஸ்கிரிப்ட்டில் விவரித்துள்ளீர்கள். நடிகை நயன்தாரா மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமனின் இசை அருமை... 2023-ல் வெளியான நல்ல படங்களின் பட்டியலில் இப்படமும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் அன்னபூரணி படம் குறித்து பதிவிட்டுள்ள ஒரு ரசிகர்...  இப்படத்திற்கு 3.25/5 மதிப்பீடு கொடுத்து, இது ஒரு நல்ல படம். நயன்தாராவின் சிறப்பான நடிப்பு மற்றும் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஜெய் மற்றும் சத்யராஜ் நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. முதல் பாதியை விட இரண்டாவது பாதி நன்றாக உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இசை சூப்பர். நிலேஷ் கிருஷ்ணா ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை எடுத்துள்ளார். கண்டிப்பாக போய் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளார்.
 

இப்படம் குறித்து கூறியுள்ள மற்றொரு ரசிகர், அன்னபூரணி இடைவேளை: மிகவும் ஈர்க்கக்கூடியது. மற்றொரு ஷங்கர் உதவியாளர் கவனம் ஈர்க்கிறார்.  சிறந்த உரையாடல்கள் மற்றும் வலுவான கோர்வைகளால் நிரப்பப்பட்ட ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். நயன்தாரா ஒரு அற்புதமான நடிப்பை வழங்குகிறார். அவர் ஏன் வியாபாரத்தில் சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்!
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios