ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி என பல்வேறு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அதில் இந்த வருடம் சிறந்தவர்கள் யார் என கருத்து கணிப்பு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் இளம் வயதில் அதிக செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் யார் என GQ  என்கிற நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தென்னிந்திய அளவியில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, இயக்குனர் பா.ரஞ்சித், மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த லிஸ்டில் நடிகை டாப்ஸியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை தவிர்த்து பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அளவில் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளால், நயன்தாராவுக்கும், பா.ரஞ்சித்துக்கும் மேலும் கௌரவத்தை தேடி தந்துள்ளது. அதே போல் பலர் இவர்களுக்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.