லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் 'ஐரா'. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இவர் நடித்து வரும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில். இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

'மேகதூதம்' என்று தொடங்கும் இந்த பாடல் சுந்தரமூர்த்தி இசையில் தாமரை எழுதியுள்ளார். அழுத்தமான பாடல் வரிகளை கொண்ட இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.