ரிலீஸ் தேதியோடு வெளியான 'நெற்றிக்கண்' ட்ரைலர்! நொடிக்கு நொடி பரபரப்பு... நடிப்பில் மிரட்டியிருக்கும் நயன்தாரா!
நடிகை நயன்தாரா மிலிண்ட் ராவ் இயக்கத்தில் வித்தியாசமாக த்ரில்லர் ஜர்னரில் மிரட்டியுள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்' தற்போது இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியான நிலையில், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா மிலிண்ட் ராவ் இயக்கத்தில் வித்தியாசமாக த்ரில்லர் ஜர்னரில் மிரட்டியுள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்' தற்போது இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியான நிலையில், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை... அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன்னர் வெளியான நிலையில்... நயன்தாராவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்தின் நயன்தாரா கண் தெரியாதவராக நடித்து மிரட்டியுள்ளார். வில்லனாக வரும் அஜ்மல் பெண்களை கடத்தி அவர்களை கற்பழித்து கொலை செய்கிறார். திடீர் என நயன்தாராவின் மீது அவரது பார்வை திரும்ப, பின்னர் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது... அதனை நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை என ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.
கண் தெரியாத வேண்டாம் என்றாலும், கார் ஓட்டுவதில் இருந்து வில்லனை மிரட்டுவது என கெத்து காட்டுகிறார் நயன். அடுத்து என்ன நடக்கும்... என்கிற ஒரு வித ஈர்ப்பையும், பரபரப்பையும் கொண்டுவருகிறது ட்ரைலர். இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என்பதையும் அறிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் இதோ...