நயன்தாரா நடிப்பில் இந்த மாதம் 28 தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ஐரா'. இந்த படத்தில் இதுவரை நடித்திராத புதிய கெட்டப்பில் நயன்தாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான 'அறம்' படத்தில், துணிச்சலான கலெக்டர் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதற்க்கு இவருக்கு ரசிகர்கள் தங்களுடைய பாராட்டை தெரிவித்திருந்தனர். 

இந்த படத்தை தொடந்து, இமைக்கா நொடிகள் படத்தில், சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள 'ஐரா' படத்தில் முதல் முறையாக துணிச்சலான பத்திரிக்கையாளராக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்தப்படத்தில், நயன்தாரா கருப்பான பெண் மாற்றும் வெள்ளையான பெண் என முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பாக நடித்திருக்கும் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் கலையரசன் நடித்துள்ளார்.

இந்த படங்கள் குறித்து, இயக்குனர் சர்ஜின் கூறுகையில், தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த திரைப்படம் மேலும் வலு சேர்க்கும் என கூறியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.