nayanthara aciting dhragubathi character
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருபவர். இவரை தன்னுடைய படத்தில் கமிட் செய்வதற்காக பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆறு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கன்னட படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குருஷேத்திரா என்று பெயரிட்டுள்ள இந்த திரைப்படம் மஹாபாரத சரித்திர கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இயக்குனர் நாகண்ணா இயக்கவிருக்கும் இந்த படத்தில், கன்னட நடிகர் தர்ஷன் துரியோதனாகவும், நடிகர் ரவிச்சந்திரன் கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரீஷ் பீஷ்மராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் பாஞ்சாலி வேடத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க, படக்குழுவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த திரைப்படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
