கோலமாவு கோகிலா ரீமேக்காகவே இப்பொழுது குட் லக் ஜெரி உருவாகி இருப்பதால் ஒரிஜினல் படத்தின் சுவாரஸ்யம் இதில் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழில் நல்ல வெற்றி பெற்ற நெல்சனின் முந்தைய தயாரிப்பான கோலமாவு கோகிலா படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. இதன் உரிமையை இயக்குனர் கரண் ஜோஹர் பெற்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திலிருந்து ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..."ஆணுறை ஃபேஷன் இல்ல"..தடாலடியாக பேசிய சாய் பல்லவி !
மேலும் செய்திகளுக்கு...பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த கழுதைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
லைக்கா ப்ரொடக்ஷன், கலர் எல்லோ ப்ரோடுக்ஷன் மற்றும் மகாவீர் ஜெயின் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜான்விகபூர் , தீபக் டொப்ரியல், மிட்டா வஷிஷ்ட், நீரஜ் சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டார்க் காமெடி படமான கோலமாவு கோகிலா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நெல்சன் இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான இதை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர் எஸ் சிவாஜி, சார்லஸ், வினோத் ஹரிஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனின் எழுத்தில் உருவான "கல்யாண வயசு தான் வந்துடுச்சு" பாடல் படம் வரும் முன்னரே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடல் தான் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது என்று கூட சொல்லலாம்.
மேலும் செய்திகளுக்கு...நட்சத்திராவின் கணவரை திட்டி தீர்த்த ஸ்ரீநிதி...திருமணத்திற்கு பின்னர் என்ன செய்தார் தெரியுமா?

மிடில் கிளாசில் இருந்து வரும் ஒரு பெண் தன் குடும்பத்திற்காக போதை பொருளை கடத்த முற்படுகிறாள் அப்போது அவள் சந்திக்கும் விளைவுகளை காமெடி கலந்து கூறியிருப்பார் இயக்குனர். இந்த படம் 20 கோடி ரூபாய் நுழைச்சீட்டு மூலம் வசூலித்திருந்தது. இதன் ரீமேக்காகவே இப்பொழுது குட் லக் ஜெரி உருவாகி இருப்பதால் ஒரிஜினல் படத்தின் சுவாரஸ்யம் இதில் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
