nayanthaara produced atharva movie

நடிகை நயன்தாரா, நடிப்பு மட்டும் இன்றி திரைப்படம் தயாரிப்பிலும், கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், அடுத்ததாக நயன்தாராவின், காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தை நயன்தாரா தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில், அதர்வா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதர்வா நயன்தாராவுடன், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த போது, அதர்வாவின் நடிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தையும் பார்த்து, இந்த படத்தில் இவரை நயன்தாரா கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘இதயம் முரளி’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.