நடிகை நயன்தாரா தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்ற நிலையில், தற்போது வடசென்னை பகுதியில் நடந்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் விஜய் மற்றும் நயன்தாரா இருவரும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதை அறிந்த ரசிகர்கள், இவர்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு தினத்திற்கு முன் விஜய்யை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை களைத்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாதுகாப்பு மீறி துணை இயக்குனர் ஒருவர் நயன்தாராவின் அனுமதி பெறாமல் கதை சொல்ல வேண்டும் என அவரை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாரா இதற்கு முன் அவர் படத்தில் பணியாற்றிய போதிலும் அனுமதி பெறாமல், அனைவருக்கும் போடப்பட்டுள்ள கட்டுப்பாடே மீறி, கதைசொல்ல வந்ததால் அவரை தன்னுடைய பாதுகாவலர்களை வைத்து வெளியே அனுப்பி விட்டார் என கூறப்படுகிறது.

நன்கு அறிந்த தன்னையே, நயன்தாரா இப்படி நடத்தியுள்ளார் என பாதிக்கப்பட்ட இயக்குனர் கோலிவுட் வட்டாரத்தில் ஆதங்கத்தோடு கூறி வருகிறாராம்.