Nayantara next film has this title expecting increased...
நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்துக்கு “கோலமாவு கோகிலா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரால் படத்தின் எதிர்ப்பார்ப்பு இப்போவே கூடிக் கொண்டே போகுது.
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சினி வட்டாராங்களில் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. முன்னணி மாஸ் ஹீரோயின்களில் நம்பர் ஒன் நடிகை.
எப்பவுமே தன்னை நம்பர் ஒன் நடிகையாக வைத்துக்கொள்ள கதைகளை கச்சிதமாக தேர்வு செய்வார். தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் வரவு அதிகரித்துக் கொண்டே போனாலும் தனக்கென தனி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள வேலைக்காரன் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தின் நயன்தாரா நடிக்க இருக்கிறார். தற்போது அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அதுதான் “கோலமாவு கோகிலா”. இப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறதாம். படத்தின் தலைப்பும் அப்படிதான் இருக்கிறது.
இப்படமும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நயன்தாராவுக்கு “கோலமாவு கோகிலா” என்ற தலைப்பு செம்மையா பொருந்துது.
