கோடம்பாக்கம் ஏரியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி நாட்டி வரும் நயன்தாராவுக்கா இந்த நிலைமை? என அதிர்ச்சி விலகாமல் வாயடைத்து கிடக்கிறார் நடிகை கவுதமி. 

நயன் தாராவின் கால்ஷீட்டுக்கு கால்கடுக்க அலைந்து வருகிறது ஒரு கூட்டம். பெரும் நாயகர்களின்  கால்ஷீட்கூட கிடைத்து விட்டாலும் சில நேரங்களில் நயனை நாடமுடியவில்லை. அம்மணி அந்த அளவுக்கு பிஸியோ பிஸி. வயசு ஏற ஏற மவுசும் கூடி வருகிறது அவருக்கு... அதற்குக் காரணம், தமிழ் சினிமா ரசிகர்களின் அப்படி. 

இந்த நிலையில் நடிகை கவுதமிக்கு படம் இயக்க ஆசை. அதற்கு தயாரான கவுதமியின் முதல் சாய்ஸ் எல்லோரையும் போல நயன்தாராவே... கவுதமி, நயனை சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார். ‘நல்லாயிருக்கே, நான் நடிக்கிறேன். ஆனால் எனக்கு கால்ஷீட் பார்க்கறது தெலுங்கு நடிகரான ராணாவின் நிறுவனம். அங்கு போய் கேளுங்க’ என்று கவுதமியை அனுப்பிவிட்டார் நயன். போன இடத்திலும் கவுதமியிடம் கதை கேட்டிருக்கிறார்கள். கடைசியில், ‘கதை பிடிக்கல’ என்று சொல்லி அனுப்ப முயன்றிருக்கிறார்கள். அதிர்ச்சி விலகாத கவுதமி, அங்கிருந்தே நயன்தாராவை தொடர்பு கொண்டிருக்கிறார்.

‘என் கால்ஷீட்டை மொத்தமா கான்ட்ராக்ட் எடுத்துட்டாங்க. அவங்க முடிவை நான் தட்ட முடியாதே... என்ன செய்ய..?’ என நழுவி விட்டாராம். நொந்து போய் திரும்பி வந்திருக்கிறார் கவுதமி. கழுத்தை பிடித்து தள்ளாமல் கதவை சாத்துகிற வித்தை தெரியவேண்டும் என்றால், நயன்தாராவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் இதனை அறிந்த தமிழ் திரையுலகினர்.

 

உண்மையில் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் நயன்தாராவின் கால்ஷீட்களை கவனித்து வருவதாக அடித்துக் கூறுகிறார்கள் தமிழ் திரையுலகினர். அப்படியானால் ராணா நிறுவனம்..? அது பூச்சுற்றுதல் என்கிறார்கள். இதில், விக்னேஷ் சிவனும் உடந்தையாம். தவிர்க்க முடியாதவர்கள் வந்து கதை சொன்னால் அந்த விஷயத்தில் விலகிக் கொள்வாராம் விக்னேஷ்..!