ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நவாசுதின் சித்திக், சிவ சேனா கட்சியின் தலவர் பால் தாக்கரேவாக நடித்துள்ள படம் ஜனவரி 25 அன்று திரைக்கு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுல் ஒருவரான பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்றை அவரது பெயரிலேயே அபிஜித் பன்சே என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நவாசுதின் சித்திக்,’ தாக்கரேவின் மேனரிசத்தையும், அவருடைய சில லுக்குகளையும் கொண்டுவருவதற்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டேன். அவருடைய தோற்றத்திற்கு ஏறத்தாழ நான் பொருந்தி வந்ததற்கு என்னுடைய மேக் அப் மேனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.

சில வருடங்களுக்கு முன் ராம்கோபால் இயக்கத்தில் வெளிவந்திருந்த ‘சர்கார்’ படம் கூட மறைமுகமாக பால்தாக்கரேவின் கதைதான். அதில் தாக்கரே வேடத்தில் அமிதாப் நடித்திருந்தார்.