Navetta Thomas is the best actress found by Telugu cinema - Rana praised
தெலுங்கு சினிமா கண்டுபிடித்த சூப்பர் ஹீரோயின் நிவேதா தாமஸ் தான் என்று வெகுவாக பாராட்டித் தள்ளியுள்ளார் நடிகர் ராணா.
தமிழ் சினிமாவில், போராளி, நவீன சரஸ்வதி சபதம், கமல்ஹாசனின் பாபநாசம் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நிவேதா தாமஸ்.
பாபநாசத்தில் இவரது நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டினர் என்பதும், ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கச்சியாக வரும் இவர் நடித்தது ஒருசில காட்சிகளே என்றாலும் அதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கு சினிமாவில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் நானி, ஆதி மற்றும் ராணா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் நின்னுக்கோரி. இந்தப் படம் இன்று திரைக்கு வரவுள்ளது.
இப்படம் குறித்து ராணா கூறியது:
“நானி, ஆதி மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோருடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது என்று அவர்களின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
தெலுங்கு சினிமா சமீபத்தில் கண்டுபிடித்த மிகச்சிறந்த நடிகை நிவேதா தாமஸ் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
