naughty security checking in theatres and malls anger abi saravanan
சென்னையில் உள்ள தியேட்டர்கள், மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தனக்கு தர்ம சங்கடமாக உள்ளது என்று தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் அபி சரவணன்.
இளம் நடிகரான 'அபி சரவணன்' குட்டிப்புலி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தலைகாட்டினார். விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்று இயன்ற உதவிகளைச் செய்தார்.
இப்போது, சமூகக் கருத்தோட்டத்துடன், மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "மால்கள், திரையரங்குகளில் சோதனை என்ற பெயரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய் உள்ளது. அதான் மெட்டல் டிடெக்டர் இருக்குல்ல... அப்புறம் என்ன கையில வேற தடவிப் பார்க்குறாங்க?
ஏன்... பெண்களுக்கு மட்டும் தான் மானம் மரியாதைல்லாம் உண்டா .? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு உள்ளதைப் போல ஆண்களுக்கும் தனி அறை போன்று மறைவிடத்தில் சோதனை செய்யலாமே?" என்று கூறியுள்ளார்.
