தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகதோட்டு அறியப்படும் சந்தோஷ் சிவனின் தந்தையும், பழம்பெரும் ஒளிப்பதிவாளருவான சிவன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் காலமானதாக வெளியான தகவலை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று பலராலும் தேசிய விருது ஒளிப்பதிவாளராகவும், திரையுலகின் பன்முகம் கொண்ட நபராகவும் பார்க்கப்பட்டும் சந்தோஷ் சிவனின் ஆரம்ப கால வழிகாட்டியாக இருந்தவர் அவரது தந்தை தான். 86 வயதாகும் இவர், ஒரு ஸ்டில் புகைப்பட கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி பின்னர் சிவன் ஸ்டுடியோ என தன்னுடைய பெயரில் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தினார். வீட்டில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.