Asianet News TamilAsianet News Tamil

தனக்கு முதல் காதல் கடிதம் எழுதியவரை இன்னும் மறக்காமல் தவிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்...

’கல்லூரியில் படித்தபோது எனக்கு யாருமே லவ் லெட்டர் கொடுக்காததால், நடிகையான பிறகு வந்த ஒரு ரசிகரின் முதல் காதல் கடிதத்தை இன்னும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்’என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
 

national award winner actress keerthy suresh interview
Author
Chennai, First Published Aug 13, 2019, 12:22 PM IST

’கல்லூரியில் படித்தபோது எனக்கு யாருமே லவ் லெட்டர் கொடுக்காததால், நடிகையான பிறகு வந்த ஒரு ரசிகரின் முதல் காதல் கடிதத்தை இன்னும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்’என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.national award winner actress keerthy suresh interview

’மகாநடி’படத்துக்காக தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார். விருது கிடைத்த பின்னர் தனது மகிழ்ச்சியைப் பலருடனும் பகிர்ந்துகொண்டு வரும் அவர் “சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மீண்டும் ஒரு  வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். national award winner actress keerthy suresh interview

சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸிங் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும். ஒரு தடவை நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பமும் என்னை காதலிக்கிறேன் என்று எழுதிய ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.” முதல் காதல் பூரிப்போடு சொல்கிறார் அவர்.

இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போயிடலை. லெட்டர் எழுதிய காதல் மன்னன் எங்கிருந்தாலும் ஒரு பூன்கொத்தோடு கீர்த்தி சுரேஷைத் தேடிச்செல்லவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios