திருமணத்திற்கு பின் நடிகைகளுக்கு அதிகமாக படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது அமலாபால் வாழ்க்கையில் தற்போது உறுதியாகி உள்ளது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தனுஷின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது மலையாள படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தான் அது.

இந்த படத்தின் தயாரிப்பு உரிமையை நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் நடிகை கங்கனா நடித்து விருது பெற்ற இப்படத்தை மலையாளத்தில் அமலா பாலின் சாதனையை கருத்தில் கொண்டு அவரையே நடிக்க வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் தமன்னாவையே தெலுங்கில் நடிக்கவைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.