national award controversy kamal open talk

கடந்த சில நாட்களுக்கு முன் 64வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது கொடுக்கப்படுவதில்லை பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறி இருந்தார், இந்த தகவல் பல பிரபலங்களையும் அதிச்சிக்குள்ளாக்கியது.

 மேலும் இவர் கூறிய கருத்துக்கு இயக்குனர் பிரியதர்ஷன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் தனது டுவிட்டரில் இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என்றும் வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்று சாட்டையடி பதில் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் கூறியபோது, விருதுகள் வழங்கப்படுவதில் இன்று நேற்றல்ல, பல காலமாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதுவும் ஒருவகை ஊழல் என்றும் ஆனால் இந்த ஊழல் குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை' என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து உலகநாயகன் கமல்ஹாசனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், '12 பேர் முடிவு செய்தது. அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.