பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன இயக்குனர் இன வெறியோடு பேசியதாக கூறி ஏற்கனவே அவரை கைது செய்ய வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தப்பட்டு தற்போது தான் அது முடிவிற்கு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த‘  ஜுலை 14ம் தேதி அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில்  நடிகர் சக்தி நாதஸ்வரம் வாசிப்பது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அவர் நாதஸ்வரத்தை தவறாக வாசித்துள்ளார் என்று இசை வேளாளர் சங்கம் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் சக்திக்கு இதை எப்படி தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்க வைப்பார்கள் நிகழ்ச்சியாளர்கள்.

மன்னிப்பு கேட்க சக்தி ஒற்றுக்கொள்வாரா, அல்லது மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.