பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்து கொண்டு தனது கணவர் நடிகர் நாசரை தனது பெற்றோர்களுக்குக் கூட உதவி செய்யவிடாமல் தடுத்த கமீலா நாசர் தேர்தலில் நின்று மக்களுக்கு மட்டும் நல்லதா செய்துவிடப் போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர்,

இந்த படங்களில் இருப்பவர்கள் நடிகர் நாசரின் தந்தையும், தாயும் படத்திலிருக்கும் இன்னொருவர் நாசரின் கடைசித்தம்பி செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் மிக வறுமை நிலையில் உள்ளனர், நாசரின் இன்னொரு தம்பி தான் இவர்களை சிரமப்பட்டு கவனித்துக் கொள்கிறார், நாசர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, இவர்களை கண்டு கொள்வதே இல்லை, வந்து பார்ப்பதும் கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் நாசரின் மனைவி கமீலா நாசர் தான் என்கிறார் இச்செய்தியை முன்வைக்கும் நாசரின் தம்பியான ஜவஹர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர்,நடிகர் சங்கத்தலைவர் என்று பல முகங்களுடன் சமூகத்தில் கெத்தாக அலையும் நடிகர் நாசரின் இன்னொரு அதிர்ச்சிகரமான முகத்தைத் தோலுரித்துக்காட்டி ஒரு இரண்டு நிமிடக் காணொளி மூலம் பார்ப்பவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரது உடன்பிறந்த சகோதரர் ஜவஹர்.

ஜவஹர் பேசியுள்ள காணொளியின் சாராம்சம் இதுதான்...கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே செங்கல்பட்டில் கடுமையான வறுமையில் வசிக்கும் பெற்றோர்களை நாசர் கண்டுகொள்வதோ உதவி செய்வதோ இல்லை. அவர்களது பேரன்களைக் கூட ஒன்றிரண்டு முறை மட்டுமே கண்ணில் காட்டியுள்ளார்.

இது குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் கொடுக்க ஜவஹர் சென்றபோது அதை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.காரணம் நடிகர்களுக்கு மத்தியில் அவருக்கு உள்ள மிஸ்டர் நல்லவர் என்ற இமேஜ். மேடைகளில் நல்லது கெட்டது, குறிப்பாக சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது  குறித்து இலக்கண இலக்கியத்தோடு உரையாற்றும் நாசர் தன்னைப் பெற்றெடுத்தவர்கள் விஷயத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறார் என்கிறார் ஜவஹர்.

இந்நிலையில் தனது கணவன் தனது சொந்தப் பெற்றோர்களுக்குக் கூட உதவ மனசில்லாத கமீலா கமல் கட்சியில் மத்திய சென்னையில் போட்டியிடுவதாக அறிந்துதான் நான் இச்செய்தியினைப் பகிரவே முன்வந்தேன். சொந்த மாமனார் மாமியாரை கண்டுகொள்ளாத கமீலாவா மக்களுக்கு நல்லது செய்வார். இதுகுறித்து விரிவாக உரையாட நான் மிக விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வருகிறேன்’ என்கிறார் ஜவஹர்.