Asianet News TamilAsianet News Tamil

’நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்தது ஜனநாயகப் படுகொலை’...கொந்தளிக்கும் நாசர்...

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால்,  எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

nasser blames tn govt for appointing special officer
Author
Chennai, First Published Nov 8, 2019, 10:00 AM IST

’விஷால் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார் என்பது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே’ என்கிறார் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.nasser blames tn govt for appointing special officer

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நியமிக்கப்பட்டது போலவே நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது அச்சங்க உறுப்பினர்களைக் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நடிகர்  நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,’ தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால்,  எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு விஷால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் காரணம் என்பது  முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.nasser blames tn govt for appointing special officer

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சர்கள் சிலரை சந்திக்கவே செய்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள். இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம்.

முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை  நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த நேரத்தில் இப்படி நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios