வாயில் சிகரெட்டுடன்  கிக்  ஏற்கும் உடையில் நடிகை நஸ்ரியாவின் புது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதேவேளையில் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.   தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா விற்கு இணையான  டப் கொடுத்த தமிழ் நடிகை யார் என்றால் அது நஸ்ரியா என்றுதான் சொல்லுவர்.  அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் நஸ்ரியாவுக்கு அதிகம்.  தமிழில் நேரம்,  ராஜா ராணி,  படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பிரபல நடிகை ஆனார் நஸ்ரியா,  தமிழில் மட்டுமின்றி  மலையாளத்திலும் தன் நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆவார். 

நயன்தாராவுக்கு இணையாக நஸ்ரியா வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார் நஸ்ரியா.  இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். நஸ்ரியா மட்டும் ஃபீல்டில் இருந்திருந்தால் ஒரு கலக்கு கலக்கி இருப்பார் நயன்தாராவை எல்லாம் தூக்கி ஓரம் கட்டி இருப்பார் என்று அவரது ரசிகர்கள் இப்போதும் மார்தட்டி வருகின்றனர்.  இந்நிலையில்  அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில்,  நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

 டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப் புதிய படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது அதில் நடிகை நஸ்ரியா  கிக் ஏற்றும் உடையில் கண்ணில் கூலிங்கிளாஸ் , வாயில் சிகரெட், என பளீரென காட்சியளிக்கிறார்.  இது  நஸ்ரியா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் வாயில் சிகரெட் அடிப்பதுபோல் காட்சி வெளியாகி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.