நடிகை நஸ்ரியா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்திருந்தாலும், இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்ததன் மூலம் மிக விரைவில் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர்.

இவர் திரைத்துறையில் அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே மலையாள நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணமும் செய்துக்கொண்டார். நஸ்ரியாவிற்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும், இவர் திருமணம் செய்துக்கொண்டதால் பலருக்கு இது சோகத்தைத்தான் ஏற்படுத்தியது.

இந்நிலையில், நஸ்ரியாவின் கணவர் அவருடைய ரசிகர்களை சந்தோஷ படுத்தும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், மீண்டும் நஸ்ரியா நடிக்க வருகிறாராம்.

தற்போது இவர் ஒரு மலையாள படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவரது ரசிகர்கள் நஸ்ரியாவை திரைப்படத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.