முதன் முதலில் தமிழில் இயக்குநா் காா்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த “துருவங்கள் பதினாறு” அனைவரது பாராட்டையும் பெற்றது.

இளம் இயக்குநா் காா்த்திக் நரேன் இந்த சின்ன வயதில் எவ்வளவு அழகான படத்தை கொடுத்திருக்கிறாா் அதுவும் எவ்வளவு நேர்த்தியாக என்று திரையுலகினா் அதிா்ச்சி அடையும் வகையில் இருந்தது அந்தப் படம்.

தற்போது அவா் அடுத்து இயக்கும் படம் நரகாசூரன். இந்த படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பா் மாதம் ஊட்டியில் தொடா்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

இதில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா்.

இந்தப் படத்தில் இவர் ஒரு தில்லான முடிவை எடுத்துள்ளார், அது என்னவெனில் இதில் பாடல்கள் எதுவும் கிடையதாம். ஒரு படத்தில் பாடல்கள் இல்லையென்றால் அந்தப்படம் ரசிகர்களுக்கு சளிப்புத்தட்டாத அளவில் கொண்டு செல்வது மிக அவசியம். அந்த ரிஸ்கை இவர் எடுக்கிறார் என்பது தான் அவரது தில்.

பாடல்கள் இல்லாமல் கமலின் குருதிப்புனல், சமீபத்தில் வெளியான ஆரண்ய காண்டம், ஓணாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் வெளியாகி சாதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நரகாசூரன் படத்தை அவரது சொந்த தயாாிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் மற்றும் கௌதம் மேனன் நிறுவனமும் இணைந்து தயாாிக்க உள்ளது என்பது கொசுறு தகவல்.