அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சிப் பிரபலம் ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

 

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்வது போல் திரைப்படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் ரசிகர்களை கவர்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபீசிலும் 'கோகோ' திரைப்படம் இதுவரை ரூ.3.4 கோடி வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி, அரசியல் வாதியும், பிரபல பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சியில் கூறும் போது, " பெற்ற தாய்க்கு புற்று நோய். அவரை காப்பாற்ற எந்த சமரசமும் செய்துக்கொள்ளாமல் அவருடைய உயிரை காப்பாற்ற போராடுகிறார் நயந்தாரா. இந்த காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் மத்தியில் 'கோலமாவு கோகிலா' தடம் பதிக்கிறார் என புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்காக நயன்தாராவிற்கு தான்10-க்கு 7 மதிப்பெண் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதே போல் வந்து போகும் நடிகைகள் மத்தியில் நிரந்தரமானவர் நயன்தாரா என்று இவர் கூறியுள்ளதை நயன்தாரா ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.