மொட்டு மனசே என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நித்யா ராம். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய நித்யா ராம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான பல சீரியல்களில் நடித்துள்ளார். சுந்தர் சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “நந்தினி” சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அந்த படத்தில் இவரது காஸ்ட்யூம் மற்றும் மேக் அப்பை கண்டு ரசிக்க என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. 

இதையும் படிங்க: ஆபாச வெப்சைட்டில் நிர்வாண போட்டோஸ்... கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மீரா மிதுன் செய்த காரியம்...!

தொடர்ந்து சீரியல்களில் நடித்து ரசிகர்களை குஷியாக்குவார் என்று பார்த்தால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே  2014ம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நித்யா ராம், கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், சீரியலுக்கு குட் பை சொன்ன நித்யா ராம் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சம் இளம் காதல் தம்பதியையும் விட்டுவைக்கவில்லை. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

கொரோனா பரவுவதை தடுக்க ஒருவரை, ஒருவர் தொட்டு பேசக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளி விட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் காதல் கணவருக்கு நித்யா ராம் கொடுத்துள்ள கொரோனா முத்தம் வைரலாகி வருகிறது. கணவர், மனைவி இருவரும் மாஸ்க் அணிந்திருந்த படியே புதுவித கிஸ் அடித்து சோசியல் மீடியாவை தெறிக்கவைத்துள்ளனர்.