காலா படத்தில் ரஜினி காந்துக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் நானா படேகர். பொம்மலாட்டம் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் புதிது என்றாலும், பாலிவிட்டில் மிக பிரபலமானவர். மூன்று முறை தேசிய விருதும், ஃப்லிம்பேர் விரும் பெற்றுள்ளார். 

தற்போது, நானா படேகர் மீது, நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படித்தில் நடித்துள்ளார். 

2008 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நானா படேகர் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இது குறித்து பெரிய நடிகர்களுக்கு தெரிந்தும், கண்டும் காணால் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

தனுஸ்ரீ தத்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நானா படேகர், நான் 2008 ஆம் அண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்து விட்டேன். என் மகள் வயதுடையவர் தனுஸ்ரீ தத்தா. திரைத்துறையில் 35 ஆண்டுகாலத்தில் யாரும் என்னை குற்றம் சாட்டியதில்லை. என் மீது குற்றம் சாட்ட தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார் என்பதும் எனக்கு தெரியவில்லை என்று நானா படேகர் கூறியுள்ளார்.