Asianet News TamilAsianet News Tamil

முடிவானது சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ ரிலீஸ் தேதி...

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நேற்று தடபுடலாக வெளியான சூர்யா, கே.வி.ஆனந்த் காம்பினேஷனின் ரிசல்ட் முதலில் கலவையாக இருந்தாலும் இரண்டாவது மூன்றாவது காட்சிகளில் படம் படு தோல்வி என்பது உறுதியானது. அதுவரை தங்களது அடுத்த ரிலீஸ் குறித்து பலத்த மவுனம் காத்த சன் பிக்சர்ஸும், நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயனும் படத்தின் தோல்வியை உறுதி செய்ததும் முதலில் தங்கள் படத்துக்குக் கிடைத்த சென்சார் [யு] சர்டிபிகேட்டை வெளியிட்டனர்.
 

namma veettu pillai release date announced
Author
Chennai, First Published Sep 21, 2019, 11:01 AM IST

ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் சூர்யாவின்’காப்பான்’ரிசல்டுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இப்படம் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் ‘காப்பான்’தோல்வியை உறுதி செய்த சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பு நிறுவனத்துக்கு போன் செய்து இந்த வாரமே ரிலீஸ் செய்யலாம் என்று உற்சாகப்படுத்தியதாகத் தெரிகிறது.namma veettu pillai release date announced

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நேற்று தடபுடலாக வெளியான சூர்யா, கே.வி.ஆனந்த் காம்பினேஷனின் ரிசல்ட் முதலில் கலவையாக இருந்தாலும் இரண்டாவது மூன்றாவது காட்சிகளில் படம் படு தோல்வி என்பது உறுதியானது. அதுவரை தங்களது அடுத்த ரிலீஸ் குறித்து பலத்த மவுனம் காத்த சன் பிக்சர்ஸும், நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயனும் படத்தின் தோல்வியை உறுதி செய்ததும் முதலில் தங்கள் படத்துக்குக் கிடைத்த சென்சார் [யு] சர்டிபிகேட்டை வெளியிட்டனர்.namma veettu pillai release date announced

அடுத்தபடியாக இன்று காலை நாளிதழ்களில் நம்ம வீட்டுப்பிள்ளை ரிலீஸ் தேதி வரும் 27 என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் தோல்வி அடையவேண்டுமென்று சிவகார்த்திகேயன் வேண்டாத தெய்வமில்லை என்றும் இதற்காகவே தனது ரசிகர் மன்றத்தினரை பல தியேட்டர்களுக்கு அனுப்பி வேவு பார்த்ததாகவும் கிசுகிசுப்பாளர்கள் புரளியைக் கிளப்பிவிட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த 27ம் தேதியைத் தவறவிட்டுவிட்டால் வேறு வழியின்றி தீபாவளிப் படங்களுடன் தான் சி.கா. மோதவேண்டியிருந்திருக்கும். அப்படி ஒரு ரிஸ்கை எடுக்க சன் பிக்சர்ஸும், சி.கா.வும் விரும்பவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios