பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என நினைத்த ஜூலி எப்படியோ தப்பித்து விட்டார். 

இவரும், ஆர்த்தியும் வெளியே போகும் சில நிமிடங்களில் மீண்டும் வரவழைத்து ஆர்த்தி மட்டும் தான் வெளியேற போகிறார். மக்கள் போட்ட ஓட்டால் எப்படியோ இந்த வாரம் தப்பித்தார் ஜூலி.

ஏற்கனவே வெளியேற போகிற சோகத்தில், ஒருவர் விடாமல் அனைவரையும் கட்டிப்பிடித்து பிரியாவிடை பொறுத்த ஜூலி. எலிமினேஷனில் இருந்து தப்பித்ததும் மீண்டும் ஒரு முறை கட்டி தழுவினார்.

அதே போல நமிதாவை கட்டிப்பிடிக்க சென்ற ஜூலியை, வேண்டாமா வேண்டாம் அங்க போய் உட்காரு என கூறி அசிங்க படுத்தியதோடு, இங்க பாருங்க ஜூலி நான் நெருக்கமானவர்களை மட்டும் தான் கட்டி பிடிப்பேன், இதுவரை ரைசா, மற்றும் காயத்திரி அக்காவை மட்டும் தான் கட்டிபிடிச்சிருக்கேன் எனக்கு இப்படி நடந்தா பிடிக்காது என கூறி மூஞ்சில் அடித்தது போல் பேசினார்.