namitha put the condition oviya is dont yet food and not using toilet

ஓவியா படுத்து கொண்டிருக்கும் போது... நமிதாவிற்கு எப்போதும் ஜால்றா போட்டு கொண்டிருக்கும் ரைசா ஓவியாவிடம் டாய்லெட் சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகிறார். அதற்கு ஓவியா நேற்று தான் சுத்தம் செய்தேன், இரண்டு நாளைக்கு ஒரு முறை தான் செய்ய முடியும் தினமும் செய்ய முடியாது என கூறுகிறார்.

உடனே ரைசா இதனை அனைவரிடமும் கூறி பிரச்சனையே ஆகி விட்டார். மேலும் ஓவியா எந்த வேலையும் செய்வதில்லை.. அவருக்கு இனிமேல் சாப்பாடு கொடுக்க கூடாது, அவரை டாய்லெட் போக விட கூடாது என நமிதா தற்போது தலைவராக இருக்கும் சக்தியிடம் வந்து புகார் கூறுகிறார்.

இதனை கேட்ட சக்தி அப்படி எல்லாம் பண்ணமுடியாது என நமிதாவிடம் கூறினாலும், காயத்ரியை பார்த்ததும் வேறுமாதிரி பேசுகிறார். மேலும் தலைவராக சக்தி அப்படி செய்தால் நாம் அவளை புறக்கணிப்பதாக கூறி அவளுக்கு ஓட்டுகள் குவியும் என்றும் பொறுத்திருந்து இதற்கு முடிவு எடுப்போம் என கூறி தற்போதைக்கு பிக் பாஸ் பஜாரிகள் நமிதாவையும், காயத்ரியையும் சமாளித்துள்ளார் சக்தி.