namitha marriage invitation
உடல் எடையைக் குறைத்து மலையாள திரைப்படம் 'புலி முருகன்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சில நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றார். இந்நிலையில் இவர் மீண்டும் நடிக்கத் துவங்குவார் என பலரும் எதிர்பார்த்த போது, திடீர் என சில தினங்களுக்கு முன் அவருடைய திருமணம் பற்றிய அறிவிப்பும் வெளியானது.
பின் நமீதா அவருடைய திருமணம் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தான் திருமணம் செய்துகொள்ள இருப்பது 'மியா' படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகரும், தன்னுடைய நீண்ட நாள் நண்பருமான வீரா எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.


மேலும் தற்போது, இவருடைய திருமணப் பத்திரிகை வெளியாகியுள்ளது. இதில் நவம்பர் 22 ஆம் தேதி திருப்பதியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியும், 24ஆம் தேதி காலை 5 :30க்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்போது இவருடைய திருமண பத்திரிக்கையை வெளியிட்டு, நமீதா ரசிகர்கள் சமூகவலை தளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
