namitha irritating julee
"யாருடன் நாம் சேர்கிறோமோ அவர்களை போலவே மாறி விடுவோம்" என்பதற்கு எடுத்து காட்டாய் இருக்கிறார் ஜூலி. "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்றதால். தான் ஒரு செவிலியர் என்பதை மறந்து, மேக் அப் செய்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜூலி.

நேற்று காலை எழுந்தவுடன் ரைசாவிடம் சென்று, பூதம் போல் மேக் அப் செய்து கொண்டு அனைவரும் பாராட்டுவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவர் முன்னிலையிலும் போய் நின்றார் ஜூலி.
ஆனால் ஜூலியை பார்த்து ஒரு நிமிடம் அனைவரும் அவர் வெறுப்பாகும் வரை சிரித்து தள்ளிவிட்டனர்.

ஆணழகன் ஆரவ் கொஞ்சம் அதிகமாக போய் "நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்" படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் "ப்ப்பா..." என்று நாலைந்து தடவை சொன்னார். யார் கிடைப்பார் வெறுப்பேற்றலாம் என்று திரியும் நமிதாவும் ஆர்த்தியும் இவரை கிண்டல் செய்து சத்தம் போட்டு சிரித்தனர். ஒரு நிலையில் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்து ரூமிற்கு சென்றார் ஜூலி.
பின் காயத்திரி ஜூலி போட்டிருந்த மேக் அப்பை சரி செய்து விட்டு சில அறிவுரைகளையும் கூறினார். மேலும் ஜூலி செய்த காமெடியை அவ்வளவு சீக்கிரம் விடாத நமிதா ஜூலியின் மேக் அப் பார்த்ததும் தனக்கு, ஒரு பாடல் நினைவுக்கு வருவதாக கூறி "பார்க்கமுடியலையே அவ முகத்தை பார்க்க முடியலையே" என பாடி கிண்டலடித்தார்.

இதை அனைத்தையும் பார்த்த வையாபுரி, ஜூலியிடம் "என்னவாம் அவளுக்கு, அவள்லாம் மேக் அப் போட மாட்டாளா... இப்படி சிரிக்கிறா" என ஜூலிக்கு சப்போர்ட் செய்து நமிதாவை திட்டினார்.
இப்படி பலரும் மாறி மாறி ஒன்று ஜூலிக்கு சப்போர்ட் செய்கின்றனர். இல்லை ஜூலியை வம்புக்கு இழுக்கின்றனர் உற்று கவனியுங்கள் உங்களுக்கே தெரியும்.
