பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவரும் இணைந்து ஒரு குடும்பமாக நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதில் குடும்பத்தின் மூத்தவராக இருப்பவர் நடிகர் வையாபுரி. 

இவர் வீட்டில் உள்ள பெரியவர்கள் போல ஓவியாவுக்கு அட்வைஸ் செய்வதும் அதனை ஓவியா என்னால் செய்ய முடியாது என அவரை எதிர்த்து பேசுவதும் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

இந்த பிக் பாஸ் குடும்பத்தில் மூத்த மருமகள் என்கிற பொறுப்பை ஏற்ற உடன் இதனை நாள் கேவலமாக ஆடைகளை அணிந்து வந்த நமிதா, சல்வார் அணிந்து குடும்ப குத்து விளக்காக துளசி மாடத்திற்கு பூஜைகள் எல்லாம் செய்கிறார்.

இதுவரை திரைப்படத்தில் கூட இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்காத நமிதாவை முதல் முதலாக ரசிகர்கள் பிக் பாஸ்ஸில்  தான் பார்க்கின்றனர்.