Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பிரச்சாரத்தில் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் ஆட்டம் போட்ட நமீதா..! வீடியோ

வாத்தி பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து, நமீதா ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

namitha and vanathi srinivasan dancing for election campaign video
Author
Chennai, First Published Mar 27, 2021, 6:08 PM IST

வர உள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.  

namitha and vanathi srinivasan dancing for election campaign video

வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்தே கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனுவாசனுக்கும், கமல் ஹாசனுக்கும் இடையே  வாக்கு சேகரிப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர், கெளதமி, ராதா ரவி என நட்சத்திரங்கள் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான தேர்தல் களமாக இல்லாமல் வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமான டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

namitha and vanathi srinivasan dancing for election campaign video

அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திறந்தவெளி வேனில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இவர்களுக்கு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, இளைஞர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது வாத்தி பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து, நமீதா ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios