namitha acting t.rajenthar movie

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளுடன் விளங்கும் மிக சிலரில் ஒருவர் டி.ராஜேந்தர். தற்போது அரசியலிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு 'வீராச்சாமி' என்ற படத்தை இயக்கினார். அதன் பின் படங்கள் இயக்குவதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. தற்போது 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அரசியல் நையாண்டியுடன் கூடிய இந்த படத்தை டி.ஆர் இயக்குவது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராதாரவி, ரோபோசங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பதிரத்தில், கடந்த ஆண்டு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல்வேறு விமர்சனங்களை பெற்று, சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டு ஹைத்ராபாத்தில் செட்டில் ஆன நடிகை நமீதா நடிக்க உள்ளார்.

விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இது முழுக்க முழுக்க தற்போதைய அரசியை மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.