நடிகை நமீதா திருமணத்திற்கு பின், மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவர் தல அஜித்துடன், 'பில்லா' படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பர். நயன்தாராவும், நமீதாவும் சேர்ந்து வரும் காட்சிகளுக்கு தற்போது வரை தல ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

இந்நிலையில் தற்போது அஜித் கொடுத்த பரிசு பற்றி நமீதா முதல் முறையாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் தான் நடித்த 'பில்லா' படப்பிடிப்பிற்கு ஒரு முறை தன்னுடைய அண்ணன் குழந்தைகளுடன் சென்றிருந்ததாகவும், அவர்களை பார்த்தவுடன், பெரிய சாக்குலேட் பெட்டியை அவர்கள் கையில் கொடுத்து அஜித் சர்பிரைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அது தான் எதிர்பார்க்காத ஒன்று என்றும், அவர் அப்படி செய்தது தனக்கு சந்தோஷத்தை கொடுத்ததாகவும் இது மறக்க முடியாத பரிசாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் நமீதா.