நளினி கிரேஸி மோகன் காலமானார்... துக்கம் பகிர்ந்து கொள்வதாக கமல்ஹாசன் டிவீட்!!
மறைந்த பிரபல வசன கர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
மறைந்த பிரபல வசன கர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார். முன்னதாக திரைப்பட வசன கர்த்தாவான கிரேஸி மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில், மாரடைப்பால் காலமானார். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது அறிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், மோகனின் உயிர் பிரியும் கடைசி நிமிடங்களில் சகோதரரை போல் உடன் இருந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தார்.
இதையும் படிங்க: கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!
மேலும் கிரேஸி மோகனின் இறுதிச்சடங்கிலும் கமல்ஹாசன், கண்ணீர் மல்க கிரேஸி மோகனை வழியனுப்பிவைத்தார். அந்த அளவிற்கு இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கிரேஸி மோகனின் மனைவியான நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்தியுள்ளார்.
இதையும் படிங்க: செம்ம மாஸ்... ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!
இந்த தகவலையும் நடிகர் கமல்ஹாசன் தான் உறுதி செய்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.