Nakul in Brahma.com Is It Really Release? Released official information ...

நகுல் நடிப்பில் உருவான ‘பிரம்மா.காம்’ படம் இந்த மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று இயக்குநர் புருஷ் விஜய் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் புருஷ் விஜய் இயக்கத்தில், நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, கே.பாக்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பிரம்மா.காம்’.

இந்தப் படம் பற்றி இயக்குனர் புருஷ் விஜய் கூறியது, ‘‘மனிதன் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் திரைக்கதை. கடவுளாக பாக்யராஜ், கேட்கும் மனிதனாக நகுல் நடித்துள்னர்.

நகுல் விளம்பரப் பட இயக்குனராகவும், சித்தார்த் விபின் விளம்பரக் கம்பெனி செயல் அதிகாரியாகவும், ராஜேந்திரன் உரிமையாளராகவும், ஆஷ்னா சவேரி மாடல் அழகியாகவும், நீது சந்திரா நடிகையாகவும் நடித்துள்ளனர்.

இவர்களை வைத்து காமெடியாக கதை சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ஆழமான கருத்துகளை முன்வைக்கும் என்று தெரிவித்துள்ள இயக்குநர், இந்தப் படம் வரும் 15-ஆம் தேதி ரிலீசாகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.