மறைந்த நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை, நடிகை நக்மா வெளியிட, அதனை உடனடியாக நீக்க வேண்டும் என ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏப்ரல் 30  (இன்று காலை) 5 :30  மனைக்கு ரிஷி கபூர் மரணமடைந்ததாக, அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏற்கனவே, நேற்றைய தினம், பாலிவுட் முன்னணி நடிகர், இர்பான் கான் மறைந்த சோகத்தில் இருந்து மீளாத பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

ரிஷிகபூரின் மறைவுக்கு, கோலிவுட் முன்னணி பிரபலன்களான  ரஜினிகாந்த் தன்னுடைய நண்பரை இழந்து விட்டதாக கூறி இரங்கல் தெரிவித்தார். அதே போல்  கமல்ஹாசன் உள்பட தென்னிந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில், 90 களில் முன்னணி நடிகையாகவும், காங்கிரஸ் காட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும், நடிகை நக்மா, மறைந்த நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் இருந்த போது, நேற்று இரவு எடுத்த வீடியோ என்று ஒன்றை வெளியிட அதற்கு தான் தன்னுடைய கட்டணங்களை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த வீடியோவில், ரிஷி கபூரின் பாடல் ஒன்றை அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பாட, அவரின் தலையில் ரிஷி கபூர் கை வைத்து வாழ்த்தி சில வார்த்தைகள் பேசுவார்.  

தற்போது நெட்டிசன்கள் கொந்தளித்து இந்த வீடியோவிற்காக அல்ல, நக்மா கூறிய வார்த்தைக்காக தான். அதாவது, இந்த வீடியோ பிப்ரவரி மாதம், ஒருமுறை உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்ற போது எடுக்கப்பட்டதாம். எனவே இதை ஏன் நேற்று இரவு எடுத்து என கூறி பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள். அதனை நீக்கி விடுங்கள் என கூறி வருகிறார்கள். 

இந்த வீடியோ சமூக வளைத்ததில் மீண்டும் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை நக்மா நீக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.