சாதாரண தொடரை விட, அமானுஷ்ய கதைகளை கொண்டு உருவாக்கப்படும் தொடர்களுக்கு, இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் இன்றி இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நாகினி' தொடருக்கு மட்டும் இன்றி அந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.  

மேலும் செய்திகள்: இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல முன்னணி டைரக்டர்கள் படத்தில் நடித்த அரிய தொகுப்பு
 

இந்த சீரியலின், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிம்ரன் சச்தேவா. சமீபத்தில் இவர் சீரியலில் இருந்து திடீர் என விலகியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது ஏன் 'நாகினி' தொடரில் இருந்து விலகினேன் என்பதை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்படும் 'நாகினி' தொடர்,  நான்காவது சீசன் முடிந்து தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்சமயம் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள. ஒரு சில தளவுகள் கொண்டு வர பட்டுள்ளதால், விரைவில் மீண்டும் இந்த தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

மேலும் செய்திகள்: குழந்தையாக இருக்கும் போதே தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த ராஷ்மிகா! வைரலாகும் புகைப்படம்..!
 

இந்த நிலையில் இந்த தொடரின் பட்ஜெட்டை குறைக்கும் வகையில் இந்த தொடரின் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த சிம்ரன் சச்தேவாவுக்கு திடீரென 40% சம்பளம் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத சிம்ரன் சச்தேவா அந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் இந்த தொடரின்  தயாரிப்பாளர் ஒழுங்காக தரவில்லை என்றும்,  தயாரிப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்  சிம்ரன் சச்தேவா. சற்றும் மரியாதை இல்லாமலும்,  முரட்டுத்தனமாகவும் அவர் நடந்து கொண்டதால் தான் இந்த தொடரில் விலகும் முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். பிரபல தொடரின் தயாரிப்பாளர் ஒருவர் மீது நடிகை இப்படி ஒரு புகார் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.