nagarjuna acting 1000 core budget movie
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மஹாபாரதம் கதை 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழிலதிபரான பி.ஆர்.ஷெட்டி என்பவர், தயாரிக்க முன்வந்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் தர்மன் வேடத்தில், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணன் வேடத்தில் நடிகர் நாகார்ஜூனாவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நாகார்ஜூனா மற்ற படங்களின் கால்ஷீட் உள்ளதாலும், மகனின் திருமணம் நடைபெற உள்ளதால் இந்த படத்தில் நடிக்கலாமா.. வேண்டாமா.. என யோசித்து வருவதாக தெரிகிறது. விரைவில் இந்த திரைப்படத்தில் நடிப்பாரா இல்லையா என்கிற தகவல் தெரியவரும் அது வரை காத்திருப்போம்.
