திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா முதல் முறையாக அவருடைய கணவர் போட்ட ஸ்ராங் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு, பல வருடங்களாக தான் காதலித்து வந்த பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு சமந்தா நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தமிழ், மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன, 96  படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவருக்கு பிடிக்காத விஷயம் குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார்.

அதாவது, சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவிற்கு சோசியல் மீடியா என்றால் சுத்தமாக பிடிக்காதாம். "திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

நம் சொந்த வாழக்கையையும் படம் பிடித்து  சமூக வலைத்தளங்களில் போட்டு அதையும், அவர்கள் பார்க்க வேண்டுமா என்ன?" என்று கேட்பாராம். அதனால் நாக சைதன்யா அருகில் இருந்தால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த சமூக வலைத்தளம் பக்கமும் போகவே மாட்டேன்,  என கூறியுள்ளார்.