நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன். 

நாடோடிகள் படத்தில் கதாநாயகி அனன்யாவின், தந்தையாக நடித்திருந்த இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எப்படியாவது அனன்யாவை, சசிகுமாருக்கு மனம் மாறி திருமணம் செய்து வைத்துவிட மாட்டாரா என, திரையரங்கத்தில் முனங்கிய ரசிகர்களும் பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர், கும்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்தார். 54 வயதாகும் இவர், இன்று காலை திடீர் என ஏற்பட்ட, நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில், பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, கே.கே.பி. கோபாலகிருஷ்ணனின் புகைப்படத்தோடு கூடிய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். இவரின் மறைவு திரையுலகத்திரையும், அவருடைய குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.