nadigarsangam Complimentary for amalapaul and police
நடிகை அமலா பால் சர்ச்சை:
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் நடன பயிற்சி சென்ற இடத்தில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் சங்கம் பாராட்டு:
நடிகை அமலா பால் கொடுத்த புகாரின் மீது சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் விரைந்து விசாரித்து அந்த நபரை கைது செய்தனர்.
காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நடிகர் சங்க செயலாளர் மற்றும் உறுபினர்கள் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
