Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து விஷால் தொடர்ந்து வழக்கு! உயர்நீதி மன்றம் அதிரடி அறிவிப்பு!

2019-2022-ம் ஆண்டுகளுக்கான, நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதுவரை பதிவான வாக்குகள் எண்ணாமல் இருக்கும் நிலையில், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

nadigar sangam voting calculation issue high court order
Author
Chennai, First Published Oct 3, 2019, 1:40 PM IST

2019-2022-ம் ஆண்டுகளுக்கான, நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதுவரை பதிவான வாக்குகள் எண்ணாமல் இருக்கும் நிலையில், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

nadigar sangam voting calculation issue high court order

ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். அதே போல் சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜ், பொதுச்செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

nadigar sangam voting calculation issue high court order

இந்த தேர்தல் முதலில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால் அங்கு நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியது. 

இதையடுத்து, தென்சென்னை பதிவாளர் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்ததற்கு எதிராக விஷால் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

nadigar sangam voting calculation issue high court order

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட், ஏற்கனவே அறிவித்தப்படி தேர்தலை ஜூன் 23-ம் தேதி நடத்தலாம். ஆனால், வாக்குகளை எண்ணக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன் படி தேர்தல் நடந்து முடிந்தாலும், வெளியூர்களில் இருக்கும் நாடக நடிகர்கள் பலருக்கு தபால் ஓட்டு கிடைக்காததால், அவர்களால் ஓட்டு போட முடியவில்லை. மேலும் காரணமின்றி, சிலரை நீக்கியதாகவும் கூறி நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.

nadigar sangam voting calculation issue high court order

எனவே, வாக்குகள் எண்ணுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த நடிகர்கள் சங்க வாக்குகளை என்ன வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios