Asianet News TamilAsianet News Tamil

’பெற்றோருக்குத் தெரியாமல் யாருடனும் பழக வேண்டாம்’...நடிகர் சங்கம் அறிக்கை...

’ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்வரை பெற்றோர் அனுமதியின்றி யாருடனும் பழகாமல் இருந்தால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்’ என்றொரு விநோதமான யோசனையை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது நடிகர் சங்கம்.

nadigar sangam statement
Author
Chennai, First Published Mar 14, 2019, 12:57 PM IST

’ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்வரை பெற்றோர் அனுமதியின்றி யாருடனும் பழகாமல் இருந்தால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்’ என்றொரு விநோதமான யோசனையை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது நடிகர் சங்கம்.nadigar sangam statement

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்..

கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்கள் மனதை கலங்க வைத்துள்ளது. இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம். 

இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும், விரைந்தும் துணிச்சலுடனும் செயல்படும் என்று நம்புகிறோம். அந்த நேர்மைக்கு நடிகர் சங்கம் எப்போதும் துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். அலைபேசியில் உள்ள தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் உருவான முகநூல், வாட்ஸ் அப் போன்றவற்றில் உள்ள ஆபத்துகளை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.nadigar sangam statement

 நம்மை வழி நடத்துவதில், நம் பெற்றோருக்கு உள்ள முக்கிய பங்கும் அக்கறையும் வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை.  அதனால், ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெற்றோருக்குத் தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இளைய தலைமுறையினரை நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது’ என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios